பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/243

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


242 இ. ஒளவை சு. துரைசாமி

ஒழுக்கநெறியே உலகியலில் ஒழுகுவார்க்கும் உரித் தென்றும், அந்நூல்களுள் உணர்த்தப்பெறும் பல் வகை நெறிகளுள் உண்மை நெறியாவது சிவநெறி யென்றும் கூறியவாறாம். நூல், ஆகமங்கள். வேதம் பொது, ஆகமம் சிறப்பு. பொதுவும் சிறப்புமாகிய இந் நூல்கள் விதித்தன செய்தும் விலக்கியன வொழித்தும்

வாழ்வது உலகியல் என்பார், “உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது” என்றார். இவ்வொழுக்கத்தால் பெறப்படும் அறமுதல் நாற்பொருளையும் செவ்வே யறிந்து உறுதியெய்துவார்க்கு, அவரவர் தகுதிக் கேற்பப் பற்பல நெறிள் கூறப்படுதலின், அவற்றுள் உண்மைநெறியறிந்து ஒழுகும் முன்னைத் தவ முடையார் பொருட்டு, “நிலவு மெய்ந்நெறி சிவ நெறியது” என்றும் கூறியருளினார். என்பது, என்று உண்மையறிந்த பெருமக்களால் சிறப்பித்துக் கூறப் படுவது என்றவாறு.

இத் திருப்பாசுரத்துக்குப் பேருரை வகுப்பான் ஒக்க ஆசிரியர் சேக்கிழார்சுவாமிகள் இப்பாசுரத்தின் கருத்து ஈதென்பார், “உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவுமெய்ந்நெறி சிவநெறியதென்பதும்” என்று அருளிச்செய்தது கொண்டு இத்துணையும் கூறப்படுவதாயிற்று.

இதுகாறும் கூறியதற்கியைய, ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், “வேதம் சிவாகமம் என இரு பகுதிப்பட்டது மூன்று வருணத்திற்கும் உரிமை யாதலும் நான்கு வருணத்திற்கும் உரிமையாதலும்