பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 243

பற்றி என நீலகண்ட பாடியத்திற் கூறப்பட்டது. வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநூல் அநாதியமலன் தருநூலிரண்டும் ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம், நீதியினாலுல கர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீண்மறையி னொழிபொருள் வேதாந்தத், தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவகாமங்கள் சித்தாந்தமாகும் (சிவ. சித். 8:15) எனவும், உலகியல் வேத நூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும் எனவும் கூறுபவாகலின் அங்ஙனம் துலாருத்தி முறைமை பற்றிக் கூறுதலின் இருபகுதிப்பட்டது என யாம் கோடும்” என்று அறிவுறுத்தருளியிருப்பது காண்க.

இப்பாசுரத்தின் பொருள்

- அந்தணர் வானவர் ஆனினம் வாழ்க - அறவோரும் தேவரும் ஆனினங்களும் இனிது வாழ்க தண்புனல் வீழ்க - தண்ணிய மழைபொய்யாது காலந்தோறும் பொழிக; வேந்தனும் ஒங்குக - வேந்தனான பாண்டியனும் சிவஞான சிவவொழுக் கங்களால் மேம்படுக, தீயது ஆழ்க - தீமையினை யுடைத்தாகிய சமயம் ஒழிக, எல்லாம் அரன் நாமமே சூழ்க - எல்லா உயிர்களும் சிவபெருமான் திருப் பெயராகிய திருவைந்தெழுத்தினையே ஒதிச் சிறப்புறுக, வையகமும் துயர்தீர்க - நிலத்தே வாழும்