பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


244 இ. ஒளவை சு. துரைசாமி

மக்கள் இருமையினும் துன்பமின்றி வாழ்க என்றவாறு.

வேறு வேறு இனமாதல்பற்றித் தொகை கொடாது அந்தணர் தேவர் ஆனினம் என்றெண்ணி “வாழ்க” என்றார். காலந்தோறும் தப்பாது பெய்தா லன்றித் தட்பம் உண்டாகாமையின், “தண்புனல் வீழ்க’ என்றார். வேந்தனை “ஓங்குக” என்றதனால், அவன் ஓங்குதற்குரிய சிவநெறிக்கண் நில்லாமை யுணர்த்தியவாறாம். புறச்சமயம் என்றாதல், அயற் சமய மென்றாதல் கூறாது, அந்நெறி யொழுகுவாரது தீமை குறித்து, “தீயது” என்றார். எல்லாமென்றது, அத் தீநெறிக்கண் இன்றி அதனின் வேறாய நெறிநின்ற உயிர்களை யுளப்படுத்துநின்றது. திருவைந்தெழுத்துச் சிவபரம்பொருளை யுணர்த்துவதாதலின், அதனை “அரன் நாமம்” என்றும், சூழ்தல் நினைத்தலாதலின், நினைத்தும் ஒதியும் வாழ்க என்றற்கு “சூழ்க” என்றும் கூறினார், ஏகாரம், தேற்றம். வேந்தனும் வையகமும் என்புழி உம்மை எச்சப் பொருள். இனி, வேந்தனும் என்பதனைப் பிரித்து, வையகமும் என்பதனோடு இயைத்து, வேந்தனும் ஒங்குக, வையகமும் துயர்தீர்க என்று நிறுத்திப் பொருள்கூறுவாருமுண்டு. ஆயினும், அவ்வாறு பொருள்கோடல் மரபன்மையின் ஈண்டுக் கிடந்தவாறே கொள்ளப்பட்டது.

சேக்கிழார் சுவாமிகள் அருளிய பேருரை:

இனி, இத்திருப்பாசுரத்துக்குப் பேருரை விரிக்க லுற்ற ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், முதற்கண்,