பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/247

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


246 ஒ. ஒளவை சு. துரைசாமி

அந்தணர், அறவோர்; அவர் முற்றத்துறந்த முனிவராவர். திருவள்ளுவனாரும் அந்தணரென விதந்தோதப்படுபவர் இவரே யென்றற்கு “அந்தண ரென்போர் அறவோர்,” என்று தெளிவித்துள்ளார். உலகில் மக்களை அனாதியே பிணித்து நிற்கும் மல கன்மக் கட்டுக்களை அறுத்தற்குத் துணையாக வந்த உடல், கருவி, உலகு முதலியவற்றை நன்கு பயன்படுத்திக் கோடற்குரிய அறமுதல் நான்கினை யும் அவற்றிற்குரிய நன்னெறியினையும் உணர்த்தியும் ஒழுகியும் காட்டும் பேரருளாளராதலின் அவ்வருணி லையைச் சுட்டி “அந்தணர்,” என்றார். அவரால் உலகம் பெறும்பயன் அவர் தாம் பெற்றபயனே; அஃதாவது சிற்றின்பத் தொடக்ககன்று பேரின்பப் பெருவாழ்வில் திளைத்தாடுவது; அதுபற்றியே ஆசிரியர் - உலகம் இன்புற என்றார். எனவே, அந்தணர் வாழ்க என்றது உலகம் இன்புறுதற் பொருட்டு என்ற வாறாயிற்று. இன்புறுதல், இன்பம் மிகுதல்; பார்மட்டும் இன்புறு உம் இன்சொல வர்க்கு (குறள். 94, பரி. உரை) என்றாற்போல,

செய்யப்படும் வேள்வியையேற்றுச் செய்வாரை அதன் பயனைத் தலைப்படுவிக்கும் தலைமை யுடைமையின் தேவர் வாழ்க’ என்றார் என்றும், மறைமொழி கேட்டு மகிழ்ந்து போந்து வேள்வியில் நல்கப்படும் அவியுண்டு சிறப்பவராதலின், அவ் வேள்வியைச் “சந்த வேள்வி, யென்று சிறப்பித்தும் கூறினார். சந்தம், மறையோசை வடசொற் சிதைவு. தேவர்பொருட்டுச் செய்யப்படும் வேள்விகளால்