பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 249

வேள்விகள் முதலியன மன்னுதற்கும், ஆணினம் வாழ்க என்றது அருச்சனை வழிபாடு மன்னுதற்கும் என்றும் தெரித்துரைத்தவாறாம். அந்தணரைப் பிரித்துத் தேவரை ஆணினத்தோடு கூட்டி “மன்ன வாம்” எனப் பொதுமுடிபுதந்து உரை வழங்கியது, அத்தேவரனைவரும் ஆணினத்தின் அங்கத்தே படங்கியிருத்தல்பற்றியென வுணர்க. ‘துங்கவமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத, அங்க மனைத்தும் தாமுடைய வல்லவோ நல்லா னினங்கள்” (சண்டே, 19) என ஆசிரியர் தாமே உரைத்திருப்பது காண்க.

இனி நிறுத்த முறையாலே, ஆளுடைய பிள்ளையார், “வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!” என்று மொழிந்தருளிய பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

“வேள்வி நற்பயன் வீழ்புன லாவது நாளு மர்ச்சனை நல்லுறுப் பாதலால்; ஆளு மன்னனை வாழ்த்திய தர்ச்சனை மூளு மற்றிவை காக்கு முறைமையால்.” (2)

உரை வீழ்புனலாவது - மழை காலந்தோறும் பொய்யாது பொழிவது ; வேள்வி நற்பயன் - வேள்விகளால் உண்டாகும் நல்ல பயனாதலாலும்; நாளும் - நாடோறும்; அர்ச்சனை - சிவபெருமா னுக்கு நடைபெறும் அருச்சனை வழிபாட்டுக்கு நல் உறுப்பு ஆதலால் - சிறந்த பொருளாதலாலுமாம்; ஆளும் மன்னனை வாழ்த்தியது - நாட்டையாள்