பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ஒளவை சு. துரைசாமி

கின்ற வேந்தனை ஓங்குக என வாழ்த்தியருளியது; அர்ச்சனை மூளும் - அருச்சனை வழிபாடுகள் மிகுதற்கும்; இவை காக்கும் - அவை குன்றாதபடி காத்தற்கும் உரிய, முறைமையால் - முறைமையினை யுடையனாதலால், (எ - று).

‘வீழ்த தண்புனல்’ என்று பிள்ளையார் அருளிய மெய்ம்மொழி விசும்பினின்று வீழும் மழை யென்னும் பொருட்டென்பார், “வீழ்புனலாவது” என்றார். வீழ்க தண்புனல் என்று வாழ்த்தியருளவே மழை காலந்தவறாது பெய்யும் பெருமை பெறுவ தாயிற்றென்றற்குத் தொகை வாய்பாட்டால் “வீழ்புனலாவது” என்றாராயிற் றென்க. வீழ்புனல் வினைத்தொகை. இவ்வாறு மழையுளதாவது வேள்வியால் விளையும் நற்பயனென்றற்கு, “வேள்வி நற்பயன்” என்றார். பிள்ளையாரும், “அம்பரமாகி யழலுமிழ் புகையினா குதியான் மழைபொழியும், உம்பர்களேத்தும் ஒமமாம்புலியூர் உடையவர் வடதளியதுவே” (ஒமமாம். 2) என்று ஒதியருளுதல் காண்க. வேள்வியின் நற்பயனாய நல்ல நீர் திருநீராட்டுக்கும் பூசனைப்பொருள்களைத் துய்மை செய்தற்கும் பயன்படும் சிறப்புடைமைபற்றி, “அர்ச்சனை நல்லுறுப்” பென்றார். நீரை உறுப் பென்றதனால் ஏனைப்பூவணி, ஒப்பனை, புகையீடு, பராவல் முதலிய வழிபாடுகள் பலவும் இஃதில்வழிச் சிறவாமை பெற்றாம்; பெறவே, “வீழ்க தண்புனல்” என்ற மெய்ம்மொழி, வேள்வியால் விளையும்