பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 25

நற்பயன் மழை என்பதும், இறைவனை அருச்சித்து வழிபடுதற்கு இன்றியமையாதது என்பதும் உணர்த்தி நிற்றல் பெற்றாம். எல்லாவுயிர்கட்கும் இன்பம் செய்தல்பற்றி “நற்பயன்” என்றும், இன்றியமையாமை யினை வற்புறுத்தற்கு “நல்லுறுப்பு” என்றும் ஆசிரியர் சிறப்பித்தாரென வறிக.

இனி, பிள்ளையார் “வேந்தனும் ஓங்குக” என்ற மெய்ம்மொழிக்குப் பொருள் கூறுவார், “ஆளும் மன்னனை வாழ்த்தியது” என்றார். பாண்டிநாட்டிற் பாண்டி வேந்தன் கேட்ப இத்திருப்பாசுரம் பிள்ளையாரால் திருவாய்மலர்ந்தருளப் பெறுதலின் பாண்டிநாட்டை யாளும் பாண்டிவேந்தன் ஒங்குக ! என்று தெரித்தோதிற்றிலராதலின், ஆசிரியர், “ஆளும் மன்னனை” எனத் தெரித்தோதினார். இருவழியும் பாண்டிநாடு எடுத்தோதப்படாமையின், இடத்தா னும் காலத்தானும் பாண்டிவேந்தன் மேற்றாயினும், பொதுநிலையில் எல்லா நிலத்தும் எக்காலத்தும் நிலவும் வேந்தர்க்கும் அமைந்து மெய்ம்மையொளி திகழ நிற்பது உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

இதுகாறுந் தான் நின்றொழுகிய அல்வழியின் நீங்கிச் சைவமாகிய நல்வழியில் நிற்கின்றானாகலின், பாண்டிவேந்தன் நெடிது ஓங்கவே அருச்சனை .* வழிபாடுகள் நிலைபெற நடக்குமென்றும், நிலைபெறு மென்னாது “மூளும்” என்றதனால், உலகமெங்கும் அவ்வழிபாடு பரவி நிலைபெறுமென்றும் கூறினா ரென வறிக இவற்றின் நிலைபேறு அரசனது காவல்