பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/254

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் 253

நிற்கும் உயிர்களெல்லாம்; அரன் பெயர் சூழ்க என்றது - சிவபரம்பொருளின் திருப்பெயராகிய திரு வைந்தெழுத்தை எண்ணுக என்று ஒதியருளியது; தொல்லுயிர் யாவையும் - அனாதி நித்தியமாகிய உயிரனைத்தும்; அஞ்செழுத்து ஒதி - அத்திருவைந் தெழுத்தையோதி; வளர்க - சிவனருட் செல்வர் களாய் வளர்ந்தோங்குவார்களாக எ - று.

“ஆழ்க தீயது” என்று பிள்ளையார் அருளிச் செய்த பாசுரப் பகுதிக்குப் பொருள் இஃதென்பார், “ஆழ்க தீயதென்றோதிற்று அயல்நெறி வீழ்க என்றது”, என்றார். எனவே, தீயதென்றது அயல் நெறியை யென்பதும், அஃதாவது சைவத்துக்கு அயலதாய்க் கிளைத்திருந்த புறச்சமயநெறி யென்பதும் பெற்றாம். ஆழ்க தீயதென்பதிலுள்ள ஆழ்க என்றது, எஞ் ஞான்றும் கிளைக்காதவாறு புதைந்து கெடுக என்னும் பொருண்மைத்து என்பார். “வீழ்க என்றது” என்றார். ஆழ்ந்து நோக்கிச் செல்வதொன்றினை வீழ்க்கும் என்பது செந்தமிழ் வழக்காதல்பற்றி வீழ்க என்று பொருளுரைத்தாரென வறிக.

“கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே” (புற109) என்று பிறரும் வழங்கியிருத்தல் காண்க. வீழ்க என்ற பொருளுரை ஆற்றலால் மேலெழாமையை வற்புறுத்தல் உணரப்படும். இவ்வேறுபாடு காட்டற் கன்றே, ஆசிரியர், “வீழ்க தண்புனல்” என்ற திரு மொழிக்கு ‘வீழ்புனலாவது” என வேறு வாய் பாட்டால் பொருளுரைப்பாராயினது உமென வறிக.