பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/255

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


254 இ. ஒளவை சு. துரைசாமி

“எல்லாம் அரன் நாமமே சூழ்க” என்றது, சைவ சமயத்தின் வளர்ச்சி குறித்து நிற்றலின், தீயதென்பது அதற்கு அயலதாகிய சமயத்தைக் குறித்து நிற்பது இனிது பெறப்படுதலின், அதனையெடுத்தோதாது, “அயல்நெறி’ என்று உரைத்தொழிந்தார். இனி, அஃது அரன் நாமத்தைச் சூழாது சைவத்துக்கு மாறாய வற்றைச் சூழ்ந்து, அதற்கிடனாகிய வைதிகநெறியை யிகழும் தீமையுடைமையின், “தீயது” என்றார்; “வைதிகத்தின் வழியொழுகாதவர், கைதவம் முடைக் காரமண்தேரர்” (ஆல.2) என்றும், “மண்ணில் மறையோர் மருவு வைதிகமும்” (விழி.டு என்றதனால் வைதிக மின்னதென்றும் பிள்ளையார் ஒதுதல் காண்க. அரன் நாமத்தைச் சூழாது பிறவற்றை யவர்கள் சூழ்ந்தன. ரென்றற்கு, “குண்டமணராகி யொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித், தெண்டிசையுமில்லதொரு தெய்வ முளதென்பர்” (வீழி.10) என்று ஒதுதலாலறியலாம். சைவம் வேத நெறிப்பட்டதென்பது, ஆசிரியர், “விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப்பயனாம் சைவமும் போல்” (சண்டே9) என்றும், “வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்க” (ஞானசம். ) என்றும் உரைப்பது காண்க. இனி, பிள்ளையாரால் காணப்பட்ட சமணர் பலரையும் ‘பொல்லா மனசமணர்” (கொடுங், 10) என்றும், “நீதியறியாதார் அமண்கையர்” (புள். ஆல. 10) என்றும், “கோது சாற்றித் திரிவார மண்குண்டர் (சோற்று. 10) என்றும்,