பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/257

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


256 ஒளவை சு. துரைசாமி

வெகுண்ட அப்பூதியார், “மன்னவன் சூழ்ச்சி திருத் தொண்டின் உறைப்பாலே, வென்றவர் தம் திருப் பேரோ வேறொரு பேர்,” என்று உரைப்பதனால் இனிது விளங்கும். தீயது எனப் பிள்ளையார் பொதுவாய்க் கூறினாரேனும், வேதவழக்கொடு படாத வேறு சமயம் பலவும் அதனால் அடக்கிக் கொள்ளப்படும். வேதத்தை ஒரொருகால் மேற் கொள்வதும் ஒரொருகால் கொள்ளாதொழிவதும் உடைய தார்க்கிகரும் பிள்ளையாரால் ஒரோவழி மறுக்கவும் படுகின்றனர்; தருக்கமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர்சொல், “இடுக்கண் வருமொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்” (கோளிலி. 10 என்று ஒதுவது காண்க.

“அரன் நாமமே சூழ்க’ என்ற மெய்ம்மொழியில் நாமம் என்றது ‘நமச்சிவாய’ என்பதனை. இத் திருவைந்தெழுத்தினையே பரமனுக்குத் திருநாமம் என்பது. பிள்ளையார் தாமே, ‘நாதன் நாமம் நமச்சிவாயவே” (பொது, நமச். ) என்றும், திருநாவுக் கரசர், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய’ என்றும் ஒதியிருத்தலால் இனிதுணரப்படும். சூழ்தல், நினைத் தல். உயிர்கள் யாவும் உணருந்தன்மை யுடையவை யாதலின், அவை தம் முணர்வின்கண் உணர்ந்து ஒதியுய்தற்குத் துணையாவது அத்திருநாமமே யென்பார், “அரன் நாமமே சூழ்க’ என்றார். பிறாண்டும், “காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி, ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது” என்று