பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 இ. ஒளவை சு. துரைசாமி

பிள்ளையார் “சூழ்க’ என்றதற்கு ஆசிரியர், ஒதி வளர்க” என்றுரைத்த உரையின்கண்ணும் விளங்கி நிற்றல் தெளியப் படும். வாழி, அசைநிலை. ஆயினும் அஃது ஈண்டு, ஆசிரியர்க்கு அத்திருவைந்தெழுத்தின் பால் உள்ள ஆராவன்பினை வெளிப்படுத்தி, அதனால் உயிர்கள் பெறக் கடவதோர் ஆக்கத்தினை உணர்த்தி நிற்கிறது. திருவைந்தெழுத்தை ஒதினோர் தாம் அரனுக்கு அடிமையென்றுணர்ந்து அத் திருவைந்தெழுத்தாலமைந்த அவன் திருமேனியை இதயத்தே எழுந்தருள்வித்தருச்சித்தும் குண்டலியில் ஒமித்தும் புருவநடுவே கண்டு தியானித்தும் சிவ போகப் பேரின்பத்தே திளைத்தாடிச் சிறப்பரென்பது சான்றோர் முடிபொருளாதலின் “ஒதுக” என்றே யொழியாது “ஒதிவளர்க” என்று ஆசிரியர் உரைத் தருளுவாராயினரென வுணர்க.

இனி, அயல் நெறியின் நீங்கிச் சிவத்தைச் சாரும் உயிர்சார்தற் கேதுவாகிய சிவஞானம் விளங்கிய வழியும், பண்டைப் பயிற்சியால் அந்நெறியினை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றையே நோக்கித் துயருறுமாதலின், அது நீக்குதற்கு ஒதியுய்க என்பார், “ஒதிவளர்க” என்றாரென்றுமாம். -

“சொன்ன வையகமுந் துயர் தீர்கவே என்னு நீர்மை யிகபரத் தில்துயர் மன்னி வாழுல கத்தவர் மாற்றிட முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்"