பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் : 25

புதுநாள் விழாவும் ஆகிய இரண்டன் சிறப்புக்களை ஒருங்கே தன்கண் கொண்டிருந்தது. இதனை,

“மழைகால் நீங்கிய மாக விசும்பில்

குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுட்ன் அயர வருகதில் அம்ம”

என்றும், இக்காலத்தே புது மணமகளிர் புது நெல்கொண்டு அவலிடித்துப் பாற் பொங்கல் இட்டு மகிழும் திறத்தை, இதே பாட்டில்,


புதுமண மகடுஉ வயினிய கடிநகர்ப் பல்கோட் டடுப்பிற் பால்உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்குகதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை”

என்றும் நக்கீரனார் நவில்வதனால் நன்கு அறியலாம். மார்கழித் திருவாதிரை நாளில் தொடங்கித் தைப்பூசம் வரையில் நடைபெறும் தைந்நீராட்டு, பரிபாடலில் பாரித்துக் கூறப்படுகின்றது. விசயநகர வேந்தர் காலத்துத் தோன்றிய மொழி நிலை உணர்வு வேறுபாட்டால் கார்த்திகை சீரழிந்தது; தீபாவளி புதிது தோன்றிற்று, தைந் நீராடல் தலை தடுமாறிற்று: வேனில் விழா காமன் பண்டிகையாயிற்று. இக் காலத்தில்தான் தெய்வ நிலையங்களில் வழிபாட்டில்