பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 o ஒளவை சு. துரைசாமி

சென்று, ஆங்கு வாழ்வார் தாமும் துன்பம்நீங்கி இன்பமெய்தி வாழ்க என்று கருதுதல் தெரிந்து, நமக்கு அறிவுறுத்துவார் ஆசிரியர், துயர்மன்னிவாழ் உலகத்தவர் அத்துயர் மாற்றிவாழ்தல் வேண்டி, “வையகமும் துயர் தீர்கவே,” என்று அருளினார் என்று தெரிக்கின்றார்.

இனி, ‘வையகமும்,” என்ற சொல், 5)|| பெயரால் ஆண்டுவாழும் மக்களையே குறித்து நிற்கிற தென்பார், “உலகத்தவர்,” என்றும், இன்புறுக என்னாது “துயர்தீர்கவே,” என்றதனால், உலகத்தவர் இருமையிலும் துன்பமே நுகர்கின்றனரென்றும், உரைத்தருளுகின்றார். இம்மை மறுமையென்ற இருவகை வாழ்விலும் உலகத்தவர் துன்பம்மிக்கு வாழ்வதால், அவர் துன்பம் நீங்கியுய்தல் வேண்டு மென்ற திருவுள்ளத்தால் ‘துயர்தீர்க,” எனப் பிள்ளையார் அருளிச் செய்தாராயிற்று. துயர் தீர்தலாவது, அத்துன்பம் எய்தியவழி, அதற்குப் பரிதலும் பிறவும் செய்யாது அது தம்மைப்பற்றி நிற்கும் வினைமாசு கழுவவந்த மாண்பொருள் எனக்கொண்டு, துன்பம் பயக்கும் பிறவினைகளைச் செய்யாது தம்மைக் காத்துக்கொண்டொழுகலாம். அதனால், துயரொழிந்து உயிர்கட்குத் துன்பமின்றாம் என்பார், ‘மாற்றிட” என்றார். மாற்றுதலாவது, “இன்னாமை யின்ட மெனக்கொளி னாகுந்தன், னொன்னார் விழையும் சிறப்பு” (குறள். 630) என்றாற்போல, துன்புறுப்ப வந்தவினையை வினை

மாசு கழுவவந்ததாக மாறி நினைத்தல்.