பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 261

இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் நுகரும் இன்பங்கள் நிலைபேறின்றிக் கழிந்து மேலும் பிறப் பிறப்புக்கட்கு ஏதுவாகிய வினைகளை விளைவித்துத் துன்புறுத்தலின், “இகபரத்தில் துயர் மன்னிவாழ் உலகத்தவர்” என்றார். மறுமைக்கண் நுகரும் இன்பத் துன்பங்கட்கு நிலைக்களன் மண்ணுலகமேயாதல் பற்றி, “துயர் மன்னிவாழ் உலகத்தவர்” என்றார். மன்னுதல், மிகுதல்.

இவ்வாறு துயரிலே கிடந்து வருந்தும் உயிர்கள் அதனின் நீங்கியுய்தல் வேண்டுமென்ற அருளுள்ளத் தால் இவ்வுலகத்தவர் நினைக்கப்பட்டமையின், துயர்க்கேதுவாகிய வினைகளின் நீங்கி, இறைவன் திருவடியை வழிபட்டு வினையின் நீங்கி இன்புறுவர் என்பது கருதி, முதற்பாசுரத்தேயே பிள்ளையார் இதனை மொழிந்தருளினாரென்பார், “முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்,” என்றார். ஞான சம்பந்தமுடையராதலால், ஞானத்தால் சிவபரம் பொருளின் திருவருனெறி நின்றாரேயன்றி, நில்லாரும் பின்னர்த் தெளிந்து நிற்பர் என்னும் திருக்குறிப்போடு “முன்னர் மொழிந்தனர்” என்ப தொருநயம் தோன்றநிற்றல் காண்க. வினைநீக்கத் துக்கு இறைவன் திருவடி வழிபாடே. ஏற்ற சாதனமாவதென்பார் பிள்ளையார்,

“அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும்

அஃதறிவீர் - உய்வினை நாடா திருப்பது நுந்தமக் கூனமன்றே