பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/263

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


262 இ. ஒளவை சு. துரைசாமி

கைவினைசெய் தெம்பி ரான்கழ லேத்துதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்

என்றும், -

“பண்டுசெய்த வல்லினை பற்றறக் கெடும்வகை உண்மக் குரைப்பனான் ஒல்லை நீ ரெழும்பினோ”

(கோடிகா)

என்றும்,

“துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர், தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின், அக்கணிந் தரைமிசை ஆறணிந்த சென்னிமேல், கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.” (3)

என்றும் பலபடக் கூறித் தெருட்டுவது காண்க.