பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சேரமான் பெருமாள் பிரபந்தங்கள்”

சேரமான் பெருமாள் அருளிய பிரபந்தங் களைப் பற்றிச் சில கூறுதற்குமுன் அவர் வரலாற்றைப் பற்றிச் சிறிது கூறுவது முறையாகும். திருத்தொண்டர் புராணம் ஒரு பெரிய யாறு போல்வது. அவ்யாறு கயிலை மலையில் தோன்றி மண்ணிடையே பல நாயன்மார்களுடைய வரலாறு களாகப் பிரிந்து சென்று சிவ பரம்பொருளின் திருவருட் கடலில் சென்று சேர்கிறது. இதன் தோற்று வாய் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறாகும். இவ்வரலாறு திருமலையில் தோன்றித் தில்லை வாழந்தணர் புராணம் முதலாக வெள்ளானைச் சருக்க மீறாகப் பல ஆறுகளாகப் பிரிந்து சைவ வுலகில் பாய்ந்து சைவப் பயிரை விளைவித்துச் சென்று திருவருட் கடலையடைவதைக் காண்

  • திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீன மஹா சந்நிதானத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.