பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/265

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


264 இ. ஒளவை சு. துரைசாமி

கின்றோம். இவற்றுள் ஞானசம்பந்தர், திருநாவுக் கரசர் என்ற இருவர் புராணங்களாகிய யாறுகள் பெரியனவாகும். இவை தம்முள் கூடியும் பிரிந்தும் செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமி களின் வரலாறு மூலநதியாய்ப் படர்ந்து ஏயர் கோன் கலிக்காமர், சேரமான் பெருமாள் என்ற இருவர் வரலாறுகளுடன் கலந்து ஒடித் திருக்கயிலாயத் தையே அடைகிறது. கிழக்கே கடற்கரையில் தோன்றிய ஸ்ரீ சுந்தரர் வரலாறாகிய யாறு, மேற்கே சேரநாட்டில் தோன்றிய சேரமான் பெருமாள் வரலாறாகிய யாறு கிழக்கே ஓடிவந்து திருவாரூரில் தன்னோடு கலக்கக் கலந்து பாண்டிநாடெல்லாம் பாய்ந்து, சோழ நாட்டிற்கே திரும்பப் போந்து, மேற்கே சேரநாட்டிற்குச் சென்று, மீட்டும் திருவாரூருக்கு வந்து, பின்னரும் அம்மேலை நாட்டிற்கே சென்று, சிவனருட் கடலில் கலந்து ஒன்றுபடுகிறது. இவ்யாறுகளின் வரவும், இவை கொணரும் வளங்களும் நம் தமிழ்நாட்டிற்கு வழங்கிய நலத்திற்கும் அதனால் சைவ மக்கள் பெற்றுள்ள மேம்பாட்டிற்கும் அளவு காண்பது முடியாத செயலாகும்.

சேரமான் பெருமாள் இற்றைக்குச் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகட்குமுன் நம் நாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த அரசர் பெருந்தகையாகும்.