பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இ. ஒளவை சு. துரைசாமி

அமைச்சர் வந்து அரசேற்க வேண்டுங்கால், அரசின்மேல் விருப்பம் வையாது, “இன்பம் பெருகும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவர் மொழிந்தார்” என்று நினைந்து நிற்கின்றார். அமைச்சர் அரசுமுறை சிவ வழிபாட்டிற்கு இடையூறாகாது என்று பல படியாகக் கூறக்கேட்டு, “அன்பு நிலை வழுவாமை அரசு புரக்கும் அருள் உண்டேல்”, இறைவனை இடைபெற்றிடுவேன் என்று சொல்லி ஆண்டவனை வேண்டி, யாரும் யாவும் கழறுவன அறியும் அறிவு வன்மைபெற்றுக் கழறிற் றறிவாராவது இவருடைய திருத் தொண்டின் உறைப்பை நன்கு வற்புறுத்து வதைக் காண்கின்றோம். இவ்வாறு இறைவன் திருவருட் குறிப்பால் அரசு முறை ஏற்கும் இவரது மனப்பண்பு, சிவநெறிக்கண் ஊன்றி நிற்கும் ஒப்புயர் வற்ற மெய்யுணர்வினை நமக்குக் காட்டுகிறது. இவரும் பின்பு தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில், “தனக்குன்றம்மா வையம் சங்கரன்தன் அருள் அன்றிப் பெற்றால், மனக்கென்றும் நெஞ்சிற் கடையா நினைவன்” (43) என்றும், “நானிலம் ஆளினும், நான்மறை சேர்மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே” (98) என்றும் தம் மனக்கோளை விளங்க வுரைக்கின்றார்.

இவர் அரங்கேற்று உலா வரும்போது உடல் முழுதும் உவர் மண்ணுறி வெண்ணிறு சண்ணித்தாற் போல் ஒரு வண்ணான் தோன்றக்கண்டு, “உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்” என்று