பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 . ஒளவை சு. துரைசாமி

வடமொழி இடம்பெற்றது. ஊர்ப் பெயர்களும் தெய்வங்களின் பெயர்களும் வடமொழியில் மாறின. பின்னர் மக்கட் பெயரும் வடமொழிப் பெயர் களாயின.

பழந்தமிழரிடையே சமய வழிபாட்டில் அவரது தமிழ் மொழியே நிலைபெற்றிருந்தது. தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. அவற்றை நகர் என்றும் தேவகுலம் என்றும் வழங்கினர். மலை முடியும் கடற்கரையும் தெய்வங்களுறையும் கோயில் எடுக்கும் சிறப்புடைய இடங்களாயின. தவிர மலையின் முடியில் முக்கட் செல்வனுக்கு இருந்த கோயில் மலை படுகடாம் என்ற சங்க இலக்கியம் குறிக் கின்றது. இக்கோயில்கள் பலவும் மரத்தாலும் மண்ணாலும் பண்டை நாளில் கட்டப்பெற்றன. பல்லவர் காலத்தில்தான் கோயில்களைக் கருங்கற் களால் அமைக்கும் முறை உருக்கொண்டு சிறப்ப தாயிற்று. சிவபரம் பொருள் எல்லாத் தெய்வங் கட்கும் மேலாம் நிலையில் எல்லா நிலங்கட்கும் பொதுவாய் இலங்குவது பற்றிச் சிவத்துக்கு எடுக்கும் கோயில்களில் சிவனை நடுவில் வைத்துக் குறிஞ்சிக் குரிய முருகனையும், முல்லைக்குரிய மாயோனையும், பாலைக்குரிய கொற்றவையையும் பிறவற்றையும் “பரிவார தேவதைகள்” என்ற பெயரால் சூழவைத்துச் சமய ஒருமை கண்டவர் பழந்தமிழர்.

, இவையேயன்றி, ஊர்தோறும் அன்பர்கள் கூடிப் பரவுமிடந்தோறும் தெய்வங்கட்குக் கோயில்கள் இருந்தன. இவற்றின் வேறாக