பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/271

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


270 ஒளவை சு. துரைசாமி

சேக்கிழார் பெருமான், நன்கு கண்டு, நம் சேரமானுடைய அறிவு முற்றும், “நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம் பலத்துள், ஆடுங் கழலே எனத் தெளிந்த அறிவு” என்றே அறிவிக்கின்றார். நம் சேரமானும் தம் திருவந்தாதியில், இதுவே தம் கருத்து என்பாராய், “நெஞ்சமே எரியாடி எம்மான், கடல் தாயின நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன். இவ்வுலகினுள்ளே” (18) என்றும், “முனியே முருகலர் கொன்றையினாய், என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களைகண் மற்றென்றும் இல்லேன்” (40) என்றும் கூறுகின்றார். இவ்வண்ணமே, நம்பியாரூரரை நினைப்பிக்கும் கருத்தால், பரமன் தன் திருவடிச் சிலம்போசையை ஒருநாள் இவர்க்குக் காட்ட த் தாழ்த்தபோது, இவர், “அடியேன் என்னோ பிழைத்தது” என்று உரைப்பவர், “ஆசையுடம்பால் மற்றினி வேறு அடையும் இன்பம் யாது” என்று கூறுகின்றார்.

சிவ வழிபாடு புரியும் தமக்குச் செங்கோலரசு தந்து, திருவடிச் சிலம்போசை காட்டிப் பரமன் அருள் செய்வது தம் திருத்தொண்டில் வழாதிருத் தற்கே என்ற கருத்து இவர் கருத்தில் நிலவிய வண்ணம் இருக்கிறது. பாணபத்திரர் திருமுகப் பாசுரம் பெற்றுவந்து காட்டக் கண்டு அளவிலா