பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் , 27

இன்பத்தில் திளைத்த இவர் தம் அரசியற் பண்டாரத்தைத் தந்து, அரசுரிமையினையும் உடன் தருகின்றார். பாணபத்திரர் அமைதிகூர்ந்து, “அரசே, அரசு கோடற்க ஆணையில்லை” என்று உரைக் கின்றார். இவர் உடனே, தாம் அரசேற்றது. பரமன் திருவருட் குறிப்புக் கொண்டேயாதலின், அதனை ஈவதும் அக்குறிப்பினாலன்றிக் கூடாதே; தாம் செய்தது தவறாயிற்றே என்று நினைந்து அஞ்சி அடங்குவார், “இறைவராணை மறுப்பதற்கு அஞ்சி யிசைந்தார்” என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். இச் செயலால் சேரமான் கருத்தில் ஒரு நல்லுணர்வு பிறந்தமை புலனாகிறது. தன்னை நினைந்து வழிபடுபவர்க்கு ஆண்டவன் வேண்டுவன வற்றைத் தந்தும் உணர்த்தியும் வழுவாவாறு திருத்திப் பணி கொள்கின்றான் என்பதைத் தெளிகின்றார். “அரசு ஆணையில்லை” என்ற பாணபத்திரர் விடை, உமக்கு அரசு நல்கிய இறைவன் அதனை நெகிழ்த்துப் பிறர்க்குக் கொடுத்துவிட ஆணையிடவில்லை என்று இவரைத் தெருட்டுகிறது. இவர் தெளிந்து அமை கின்றார். இதனைக் குறிப்பாக இவர் தம் திருவந்தாதியில், “தாமே அருள் செய்து கொள்வர் தம் பல்பணியே” (9) என்றும், “தாழ்சடையான் வஞ்சம் கடிந்து திருத்திவைத்தான் பெருவாகையே” (1) என்றும், “புண்ணிய சூலத்தெம்மான், திருந்திய போது அவன் தானே களையும் நம் தீவினையே’ (17) என்றும் இயம்புகின்றார்.