பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/275

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


274 இ. ஒளவை சு. துரைசாமி

வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றை யுரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன் சொற்களே என்றும், அவற்றை ஏற்றல் வேண்டும் என்றும் உரைப்பார்,

‘தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன், ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்;

உரைத் தாருரைத்த கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார்; கடல் நஞ்சயன்றாய்; கொள்ளிய அல்ல கண்டாய் புன்சொ லாயினும்

கொண்டருளே’

என்கின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக்கொள் வோர்.பாடாதொழியலாமே என எழும் வினாவிற்கு விடை கூறுவார் போல, “அமரர் குழாம் நின்னைப் பொருள் மொழிகளால் போற்றிப் பரவக்கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடி யேனும் பாடலுற்றேன்; மதி தோன்றி நிலவு பொழியு மிடத்து மின்மினியும் ஒளிவிரிகிறதன்றோ” என்பார்,

“அருளால் வருநெஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்களைப்

புணர்க்கலுற்றேன்; இருள்ஆ சறஎழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே”

என்று விளம்புகின்றார். இவ்வாறு பாடிச் செல்பவர் எண்பது பாட்டுகட்குமேல் பாடிவிடுகின்றார். மேலே