பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இ. ஒளவை சு. துரைசாமி

ஆறுமின் வேட்கை யறுமின் அவலம் இவைநெறியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாம் இமையவர்க்கே”

- (70) என்று இசைக்கின்றார்.

உடல் வாழ்வின் உயர்வின்மையைப் பலவகை யால் தெளிவிக்கின்றார்.

இவ்வகையில், ஏனைப் பெரியோர்களைப் போலத்தான் இவரும் பல பாட்டுக்களில் விரித் தோதுகின்றார். உடல் வாழ்வு நீடித்ததன்று; பலவகை யாலும் தேய்ந்து தேய்ந்து இறுவது என்பார்.

“வேண்டிய நாட்களிற் பாதியும் கங்குல் மிகஅவற்றுள், ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலது.மூப்பு ஆண்டின் அச்சம் வெகுளி அவாஅழுக் காறு இங்கனே மாண்டன; சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே’

- (99)

என்று கூறுகின்றார். ஏனையோர், “வேத நூற் பிராயம் நூறு மணிசர்தாம் புகுவரேனும்” என வய தெல்லையை நூறாகக் கூற, இவர், அதனைக் குறியாது, “வேண்டிய நாட்கள்” என்பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளங்கக் காட்டுகிறது.

இனி, உடல் வாழ்வின் புன்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெருவாழ்வின்கண் ஆர்வ முண்டாவது இயற்கையே. அதனைப் பெறுதற்கு இறைவனை வழிபடுவதன்றிப்