பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/278

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ: 277

பிறிதில்லை. அவ்வழிபாட்டின் திறம் கூறலுற்ற நம் சேரமான் பெருமாள், -

“பணிபதம், பாடிசை ஆடிசையாக, பனிமலரால் அணி, பதங்கன் பற்கொள் அப்பனை; அத்தவற்கே

அடிமை துணி; பதம் காமுறு தோலொடு நீறு உடல் தூர்த்துநல்ல தணிபதம் காட்டிடும்; சஞ்சல நீஎன் தனிநெஞ்சமே 10)

என்றும், -

“நெஞ்சம் தளிர்விடக் கண்ணிர் ததும்ப முகமலர, அஞ்செங் காதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து தம்சொல் மலரால் அணிய வல்லோர்” ( ) என்றும், தொழுதல், பணிதல், நினைதல், அருச் சித்தல் முதலியவற்றின் நலம் கூறுதலுற்று,

“உலகா ஸ்ரீவீர் தொழுமின், விண்ணாள்வீர் பணிமின்;

நித்தம் பலகா முறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் நாள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே” (1) என்றும் விரியக் கூறுகின்றார். இந்நெறிக்கண் இவர் கூறுவன பலவாதலின் இம்மட்டில் அமைகின்றோம். இவ்வாறு நாம் தொண்டு புரிந்தவழி அதனை யேற்று நிற்கும் பரமனுடைய அருமையை இனிது ஒதுகின்ற்ார். அடியார் ஏத்துவதைப் பரமன் மிக விரும்புபவன் என்பார், “ஏத்துக்கொலாம் இவர் ஆதரிக்கின்றது” (7) என்று கூறுவதை நோக்க, பரமன்