பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 ஒளவை சு. துரைசாமி

மிக எளியன் என்று நாம் கருதலாம். ஆனால், அதனை மாற்றி, அப்பரமன் மிக அரியவர்; அவர் தம்மை நினைப்பவர் நெஞ்சினும் கண்ணினும் நிலவுகின்றார்; ஆயினும் அவர் தன்மை நம்ம னோர்க்கு உணர்வரிது என்பார், ‘திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தினுள்ளும் திரிதரினும், அரிதவர் தன்மை அறிவிப்பது” (9) என்று அறிவிக் கின்றார். மேலும் அவ்வருமைப் பாட்டிற்குச் சான்று கூறுவார், அப்பரமன் அட்டமூர்த்தியாய் நிற்பவர் என்று அருளுகின்றார். “அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிருடம்பு ஆகிய சோதி” (15) என்றும், “பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஒங்கு, ஒதம் உடுக்கை உயர்வான் முடி, விசும்பே உடம்பு, வேதம் முகம், திசை தோள்மிகு பன்மொழி கீதம்” (19) என்றும், இவரது இந்நிலையையுணர்ந்து பரவுபவர் சிவ லோகம் பெறுவர் என்று கூறலுற்று, “தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம், சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர்” (), என்றும் உரைக்கின்றார்.

இப் பரமனே மும்மூர்த்திகளாயும் அம்மையப்ப னாயும் விளங்குகின்றார் என்பதை,

“வின் அயன்அரி வெற்பலர் நீர்ளி பொன்னெழிலார் காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை

என்பார்-என்று நினைந்து வழிபடுபவர்.