பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் : 279

பேரொண் பதி, நிறம் தார்இவர் ஊர்திவெவ்

வேறென்பரால் பாரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.” (95)

என்றும்,

“வலந்தான் கழல்இடம் பாடகம், பர்ம்பு வலம்இடமே கலந்தான்; வலம்நீறு இடம்சாந்து, எரிவலம் பந்து இடம்;

என்பு அலந்தார் வலம்இடம் ஆடகம்; வேல்வலம் ஆழியிடம்; சலம்தாழ் சடைவலம் தண்ணங் குடில்இடம் சங்கரற்கே.

(65)

என்றும் கூறியருளுகின்றார். பிற நலங்களைப் பின்னர்க் காண்குதும்.

இனி இப்பரமன் அடியார்க்கு அருளும் திறத்தை, “உற்றடியார் உலகாள ஓர் ஊனும் உறங்கு மின்றிப், பெற்றமதாவ தொன்றேனும் பிரான்” (34) என்றும், “கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்தம் உள்ளவளாகத் துறுகின்ற உத்தமன்” (78) என்றும்,

“சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர்

வணங்கநின்ற அந்திக்கண் ணாடியினான் அடியார்களுக் காவனவே”

(83)

என்றும் எடுத்தோதுகின்றார்.