பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஆ ஒளவை சு. துரைசாமி

இவ்வியல்பினனாதலின், இப்பரமன்பால் பகைப்பொருள் அனைத்தும் பகை நீங்கி ஒன்றி நின்று நிலவுவதொன்றே அவனது பரமாந்தன்மையை உணர்த்துகின்றதென்பார்,

“ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியுமை வாயரவும் ஒர்க்கின்ற யோரும் உமையும், உருவு மருவும், வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும், பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்கு உடனாகிக்

கலந்தனவே” கு)

என்றும், இவ்வடிவத்தே உலகு முழுதும் ஒன்றி நிற்கிறதென்றற்கு,

“இருளார் மிடற்றல், இராப்பகல் தன்னால், இரைமரையால் பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர

வாடுதலால் தெருளார் மதிவிசும்பால் பெளவம் தெண்புனல்

- தாங்குதலால் அருளால் பலபல வண்ணமு மால்அரன் ஆயினனே"குரு

என்று இசைத்தருளுகின்றார். இவ்வியல்பால், “ஈசனோ டாயினும் ஆசையறுமின்” என்ற கொள்கை மிக்க துறவிகளும் இவர்பால் தீரா வேட்கையரா கின்றனர் என்பார், “தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, அடங்கிய வேட்கை அரன்பால் இலர்” (64) என்று அறிவிக்கின்றார்.

இவ்வகைக் கருத்துக்கள் நிரம்பிய இப் பொன் வண்ணத் தந்தாதியைத் தில்லையில் அரங்கேற்றி