பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 ஆ ஒளவை சு. துரைசாமி

பலி வேண்டிவரத், தான் பலியிட்டு மேனி வேறுபடுவதாகவும், தாயர் தடுப்பதாகவும், தன்னைப் பரமன் அப்போது வாவென அழைப்பதாகவும் கண்டு கண் விழித்து வருந்துகின்றாள். இச் செயலைச் சேரமான்,

“ஈசனைக் காண பலிகொடு செல்லு, எற்றே இவளோர் பேயனைக் காமுறு பிச்சி கொலாம் என்று பேதையர்முன் தாய்எனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன் வானனைப் புல்லஎன் றான்இமை விண்டன. வாட்கண்களே”

(2) என்று பாடிக் காட்டுகின்றார்.

இங்ஙனம் கனாக்கண்டு வருந்தும் இவள் மெலிவு கண்ட அன்னை மிகவும் மனம் நொந்து, மகளைப் பார்த்து,

“செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை

- நிறம்பணித்தான்; மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கவைத்

- தான்மனத்துக்கு ஒப்பன இல்லா ஒளிகிளர் உன்மத்த மும்அமைத்தான்

அப்பனை, அம்மனை! நீஎன் பெறாதுநின்று

ஆர்க்கின்றதே” (49) என்றுசொல்லி அவலிக்கின்றாள். இம்மகள் பின்பு தன் தோழியை நோக்கிப் பரமன்பால் தூதுவிடக் கருதி, “தோழி, நீ பரமனிடம் சென்று என் மனநிலை