பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28 ஒளவை சு. துரைசாமி

வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ, இழையணி சிறப்பின் பழையோள் குழவி, வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ r செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபே ராள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா ட்கலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில்,

எனச் சொல்லி முடிவில்,

“நின்அளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்

நின்னடி உள்ளி வந்தனென் நின்னொடு

புரையுநர் இல்லாப் புலமை யோய்”

என்று கூறி வணங்குவர். வேறு சிலர்,