பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/291

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


290 இ ஒளவை சு. துரைசாமி

செல்லப் பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும் பிணி கூர்ந்து, அயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும் அந்தோ இங்ஙனே, மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்ட வாணுதலே’ (37) என்ற திருப்பாட்டை யோதுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், “அருட்சேரர், சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஒதித் திளைத்தெழுந்தார்” என்று பாடுகின்றார்.

பின்னர் இவர் நம்பியாரூரருடன் மதுரைக்குச் சென்று மதுரைச் சொக்கேசனைக் கண்டு பரவு மிடத்து, தமக்கு அப்பரமன் விடுத்த திருமுகப் பாசுரத்தால் செய்த திருவருளை வியந்து, “அடி யேனைப் பொருளாக அளித்த திருமுகக் கருணை, முடிவேது என்றறிந்திலேன்’ என்று சொல்லி மொழிதடுமாறி மனங்குழைகின்றார். இவ்வாறு நம்பியாரூரர் தோழமை பெற்றுச் சிறக்கும் சேர வேந்தர் அவருடனே திருவாரூர்க்கே திரும்ப வந்து சின்னாளிருந்து, அவரையும் உடனழைத்துக் கொண்டு தம் சேரநாட்டிற்குச் செல்கின்றார். வழியில் திருவையாற்றுக்குச் செல்லாவகையில் காவிரி பெருகக் கண்டு நம்பியாரூரரை வேண்ட, அவர் திருப்பதிகம் பாடியதும் காவிரியில் வழி யுண்டாகிறது. அதுகண்டு வியந்த வேந்தர் நம்பி யாரூரரை அடிபணிந்து போற்றுகின்றார். நம்பியாரூரர் இறைவன் சேரமானுக்குத் திருமுகம் விடுத்தும், திருச்சிலம்போசை காட்டியும் சிறப்பிக்கும்