பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/294

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 293

வலம்வந்து அதற்கு முன்னே செல்கின்றது. அப்போது தான், நம்பியாரூரர்

“தானெனை முன்படைத்தான் அதறிந்துதன்

பொன்னடிக்கே நானென பாடல், அந்தோ, நாயினேனைப் பொருட்படுத்து வான்.எனை வந்தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்தான்மலை யுத்தமனே”

என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளு கின்றார். -

திருக்கயிலையை இருவரும் அடைகின்றனர். சேர வேந்தர் மட்டில் வாயிலில் காவலரால் தடையுண்டு நிற்கின்றனர். பரமன் திருமுன் சென்று, கன்று பிரிந்த தன் தாயினையடைந்தது போல அன்பு பெருகி வழிபட்டு முடிவில், “நீரணி வேணிய, நின் மலர்க் கழல்சாரச் சென்று சேரலன் திருமணி வாயிலில் புறத்தினன்” என்று விண்ணப்பிக்கின்றார். பரமன் வருவிக்கச் சென்ற சேரமான் பெருமாள், சிறிது சேய்த்தாகவே நின்று திருவடி பணிந்து நிற்கின்றார். அவரைக் கருணை நிறைந்த நோக்குடன், முறுவலித்து, இறைவன், “இங்கு தாம் அழையாமை நீ எய்தியது என்னை ?” என்று வினவியருள, அரசர் பெருமான் மிக்க மதி நுட்பமமைந்த மொழிகளால், “அடியனேன் ஆரூரர். கழல் போற்றிப் புரசையானை முன் சேவித்த வந்தனன்; பொழியும் நின் கருணைத் தெண்திரைசெய் வெள்ளம் முன்கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்” என்று செப்பு