பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 29

“யாஅம் இரப்பவை,

பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே”

என்றும், வேறு சிலர்,

யாமும் எம்சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுக யாம்எனவே

என்றும் வழிபடுகின்றனர். சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என்பது தமிழர் வழிபாட்டு முறை. இன்றைய தமிழர், தெய்வ வழிபாட்டில் தாம் அறியாத மொழியில் “முறம் போன்ற காதுகளையுடையவனே”, “குடம் போன்ற வயிற்றை யுடையவனே’, பெண்ணின்பத்தைப் பெரிதும் விரும்புபவனே” என்று ஆண் தெய்வங் களையும், “மலைபோன்ற கொங்கைகளையுடைய வளே”, “கடல் போன்ற நிதம்பத்தை யுடையவளே”, “இடையறாத போகத்தை விரும்புபவளே” என்று பெண் தெய்வங்களையும் வழிபாடு என்ற பெயரால் வசைபாடுகின்றனர். இன்றைய வழிபாட்டு அருச் சனைகளில் தெய்வ தூவுணமும், வஞ்சனையும் பெருகியிருக்கிற தேயன்றிப் பூசனையும் வணக்கமும் இல்லை என்றால் அது மிகையாகாது. வடமொழித் தொடர்களைக் கேட்கும் வடமொழி அறிஞர் மனத்தே வெறுப்பும், முகத்தே சுளிப்பும் கொண்டு வருந்துகின்றனர். அரசியல், கல்வி, வாணிபம்