பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 301

இவ்வுயிர்கள் எய்தும் மனநிலையே இவ்வுலா வகையாகக் கூறப்படுகிறதன்று சான்றோர் கூறுப. இதனை விரிக்கிற் பெருகும்.

இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் பல அந்தாதியினும் மும்மணிக் கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண் பாடிய வெண் பாவையே, அந்தாதியில்,

“சொல்லாதன கொழுநா, வல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம், தேறித் தொழாத கைமண், திணிந்த கல்லாம் நினையாமனம், வணங்காத் தலையும்

பொறையாம் அல்லா அவயவந் தானும் மனிதர்க்கு அசேதனமே”

என்று கூறியுள்ளார். இவ்வாறு பல ஒப்பு நோக்கிய வழிக் காணலாம்.

இனி, இச்சேரமான் இறைவனை இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பலவாகும். பரமன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமாதேவியார் அக்கங்கையின்கீழ் உறைவிடம் பெற்றிருப்பதோ என்று நகையாடுவார்போல, -

இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்டேந்தல் பின்போய் அமையா நெறிச்சென்று ஒர் ஆழ்ந்த கலைமகளாய்

அணைந்தே