பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 ஒளவை சு. துரைசாமி

எமையாளுடையான் தலைமகளா அங்கிருப்ப, என்னே, உமையாள் அவள்கீழ் உறைவிடம் பெற்றோ

உறைகின்றதே

என்று உரைக்கின்றார். பரமன் சடைதீப்போல இருப்பதும், அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவதும் கண்டு

எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கு அத்தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல்; அப்புனலில்

சரிகின்ற திங்கள் ஏர்தோணி யொக்கின்றது;அத்

தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுளதால் அத் திறல்அரவே என்று இன்பக் காட்சி காண்கின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்ப வுரையாடி நம்மை மகிழ்வுறுத்துகின்றார். பாம்பு நெருப்புயிர்க்கும் என்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகுமென்றும், பரமன் தீண்டலால் கலை நிறைந்து மண்ணையும் விண்ணை யும் விளக்குமென்றும் இவ்வாறு பிறை இறைவன் முடிமேல் இருந்தும் இன்பமும் துன்பமும் எய்துகிற தென்றும் கூறுவார்,

அரவம் உயிர்ப்ப அழலும், அம் கங்கை வளாய்க்குளிரும், குரவங் குழலுமையூடற்கு நைந்துருகும் அடைந்தோர் பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான் அவை

விளக்கம் விரவும் இடர் இன்பம் எம் இறைசூடிய வெண்பிறையே