பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/304

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 303

என்று விளம்புகின்றார், இறுதியாக, இவர் இறை வனும் தேவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தையொத் திருப்பதைக் காட்டுவது மிக்கஇறும் பூது பயப்ப தாகும்.

“பாடிய வண்டுறை கொன்றையினான் படப்பாம்புயிர்ப்ப ஒடிய தீயால் உருகிய திங்களின் ஊறல் ஒத்தது ஆடிய நீறு; அது கங்கையும் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்ததால் உமைபாகம் எம்கொற்றவற்கே”

என்பது அப்பாட்டு. இதன் கருத்தை 1943ம் ஆண்டு கல்கியென்னும் வெளியீட்டன் தீபாவளி மலரில் வெளியான திரிவேணி சங்கமப் படத்தையும் ஒப்பு நோக்கின் இதன் உண்மைத் தோற்றம் நன்கு தெளி வுறுத்தும்). இவ்வாறு இங்கிதத் துறையில் இவை போலும் பல பாட்டுக்களை இவர் பாடியுள்ளார். இவை இன்பச் சுவையேயன்றி இவருடை மனக் காட்சியின் விரியும் விளங்க வுணர்த்துகின்றன.

இனி இவர் பாடிய கருத்துக்கள் பலவற்றைப் பல பெரும்புலவர்கள் மேற்கொண்டு தாம் பாடியவற்றுள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்த புலவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் பெரும் புலவர் என்பது உலகறிந்த செய்தி. அவர் நம் சேரமானுக்குக் காலத்தால் பிற்பட்டவர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர், இவர் பாடிய, “பாதம் புவனி சுடர் நயனம் பவனம்