பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 305

லாம். அய்யரவர்கள் வடமொழிச் செய்யுளை நோக்கி, இத்திருமுறையை நோக்காது போயினர் போலும்.

இவ்வாறே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவரும் இவர் பிரபந்தங்களிலிருந்து சில கருத்துக் களைத் தம் காவியத்தின் கண் மேற்கொண்டு கையாண்டுள்ளார். மகளுற்ற வேறுபாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், சேரவேந்தர்,

அடிக்கண்ணி கைதொழுவார்க் ககல்ஞாலம்

  • கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத்தொழ வளைகொண்டனை;

வண்டுண்கொன்றைக்

கடிக்கண்ணியாய்! ஏமக்கோரூர் இரண்டகம்

காட்டினையால்

கொடிக்கண்ணி மேல்நல்ல சொல்லேறுயர்த்த

குணக்குன்றமே

என்று கூறுகின்றார். ஒரு செயலே செய்த இருவருள் ஒருவர்க்கொரு வகையும் மற்றையோர்க்கு மற்றொரு வகையும் செய்து ஒரூர் இரண்டகம் காட்டினை என்ற கருத்தைத் திருத்தக்க தேவர், சுரமஞ்சரி சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து,

“கிழவனாய்ப் பாடிவந்தென் கீழ்ச்சிறை யிருப்பக்

- கண்டென், எழுதிய பாவை நோக்கி இமையவித் திருப்பக் கண்டேன்

த.செ.-20