பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 ஒளவை சு. துரைசாமி

ஒழிகஇக் காமம் ஒருர் இரண்டஃகம் ஆயிற் றொன்றாங் அழுதகண் ணிர்கள் மைந்தன் ஆவிபோழ்ந் திட்ட வன்றே என்று அமைத்துக் கொண்டிருத்தலைக் காண்மின்,

இம்மட்டோ “இல்லாரை யெல்லாரும் எள்ளு வர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண்வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்பால் தான் காணப்படுகிறது. அவர், ஆதியுலாவின்கண், அரிவைப் பருவத்தாளின் ஒப்பனை கூறுமிடத்து,

“இல்லாரை எல்லாம் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்புஎன்னும்-சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து நல்கூர் இடையிடையே உள்ளுருகக் கண்டாள்”

என்று கூறுகின்றார். இதனைக் காணும் புலவர் எவர்க்குத் தான் வியப்புண்டாகாது போகும் ! திருத்தக்க தேவர் இதனைக் கண்டதும் பெருவியப் புற்று, தாம் செய்த காவியத்தே இக்கருத்திலேயே வைத்து அமைத்துக் கொள்கின்றார். சீவகன் நகர வீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்துகொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்க தேவர். -

“செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்துநீர் மாந்தர் போல அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகல மாய -

வெல்லாம்;