பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 309

விளங்கிய பல்லவர்களையும் அறிதற்கு உதவுவன கி.பி. 1880 முதல் இன்றுவரை சுமார் 100 ஆண்டு களாகப் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடுமாகவுள்ளன. இதுவரை சுமார் 25000 படிகள் கிடைத்துள்ளவெனினும், அன்புடைய மக்கள் அறிய வெளிவந்துள்ளவை சுமார் 5000 ஆகும். சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் வட வெல்லையாகக் கூறப்படும் வடவேங்கடத்தில் திருமாலுக்குக் கோயில் கிடையாது. இப்போது கோயிலுள்ள இடத்தில் புல்லி என்னும் வேந்தன் இருந்தான். அவனது ஆட்சி வேங்கடமலையடியில் சித்துரர் மாவட்டத்தின் மேலைப் பகுதியில் பரவி யிருந்தது. அப்பகுதியை ஆங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் புலிநாடு என்று குறிக்கின்றன.

அதுபோல, காவிரியின் ஆற்றிடைக் குறை யாகிய திருவரங்கத்தில் திருமாலுக்கோ சிவனுக்கோ திருக்கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறவில்லை. எனினும், சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த இளங்கோவடிகள் காலத்தில் வேங்கடத் திலும் திருவரங்கத்திலும் திருமாலுக்குக் கோயில்கள் தோன்றிவிட்டன.

வீங்குநீர் அருவி வேங்கட மென்னும் ஒங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னும்கோடி யுடுத்து விளங்கு விற்பூண்டு