பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 இ ஒளவை சு. துரைசாமி

நன்னிற மேகம் நின்றது போல பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறத் தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்றும், இவ்வாறே திருவரங்கத்தில் திருமாலுக்குக் கோயில் தோன்றி அவர் கிடந்தவண்ணம் காட்சி யளிப்பதை,

நீலமேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்”

என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்நாளில் வேங்கடக் கோட்டத்தில் திருச் காளத்தியும் திருவரங்கத்தில் திருவானைக்காவும் இருந்ததில்லையோ எனின், இருந்திருக்கலாம். எடுத் துரைப்பதற்கேற்ற இயைபு வரலாற்று நிகழ்ச்சியில் இல்லாமையால், சமயக் காழ்ப்பிலாச் சான்றே ராகிய இளங்கோவடிகள் கூறாமல் விட்டிருக்கலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விளங்கிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருக்காளத்தி திருவானைக்கா இரண்டையும் சிறப்பித்து இனிய