பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 31

இசைப் பாட்டுக்களால் சிறப்பித்திருக்கின்றார்கள்; இவ்வகையில் திருவானைக்கா மிக்க தொன்மை வாய்ந்து, புலவர் பாடும் புகழ்பெற்றது என்பது நன்கு மனங்கொள்ளற்பாற்று.

திருவானைக்காவை இந்து அறநிலையத்தவரும் கல்வெட்டுத் துறையினரும் சம்புகேசுரம் என்றே குறிக்கின்றார்களே எனின், இது இடையிலே தோன்றிய மாற்றம். இடைக்காலச் சோழ பாண்டியர் ஆட்சி வீழ்ந்ததும், விசய நகர வேந்தரது ஆட்சி தமிழகத்தில் பரந்த இடம் பெற்றது; முன்னைய ஆட்சியில் ஊர்தொறும் தோன்றித் திருக்கோயில் களைக் கண்காணித்து வந்த திருவுண்ணாழிகை யுடையார், மாகேசுரக் கண்காணிகள், ஊர் மகா சபையினர் மறைந்தனர். கோயில் பூசைத் திருப்பணிக் கெனச் சோழ பாண்டிய மன்னர் நிறுவியிருந்த சிவ வேதியர், பண்டு தொட்டு நிலவிய தமிழ்ப் பெயர்களை வடமொழிப்படுத்தும் புதிய புதிய கதைகளைத் தொடுத்தும் தொன்மை வரலாற்றை மறைக்கும் செயலை மேற்கொண்டனர். தமிழரல் லாத விசய நகர வேந்தரது ஆட்சி அதற்கு இடையூறு செய்யவில்லை; அடுத்து வந்த ஆட்சிகளும் அவ் வியல்பினவேயாக இருந்தமையின், வடமொழிப் படுத்தும் செயல் வெற்றி கண்டது. வழிபாடுகளும் செயல்வகைகளும் வடமொழியிலேயே சமைக்கப் பெற்றன. இன்னோரன்ன மாறுதல்களால் திரு வானைக்கா என்ற பெயர் பொதுமக்களிடையிலும்,