பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 ஆ ஒளவை சு. துரைசாமி

சம்புகேசுரம் என்ற பெயர் கற்றோர் சிலரிடையிலும் வழங்குகின்றன.

திருக்கோயில்கள், பல்லவர் காலத்தில் கருங் கற்களால் அமையும் திருப்பணிச் சிறப்புப் பெற்று, வழி வழி வந்த வேந்தர்களாலும் செல்வர்களாலும் கற்றளிகளாக உருக் கொண்டன. பண்டைய வேந்தர் ஆட்சிகளில் திருமாலுக்குக் கோயிலைச் சிவன் கோயிற்குள்ளேயே அமைத்திருந்தமையின், தனிக் கோயில்கள் அருகியே இருந்தன. திருமால் கோயிலைத் தன்னகத்தே கொள்ளாத சிவன் கோயிலுக்குச் சிறப்பில்லை; சிவாகமங்கள் அவ்வாறே விதிக்கின்றன. இச்சிவன் கோயில்கள் பலவும் அமைப்பிலும் வழிபாட்டிலும் பிற நிகழ்ச்சிகளிலும் சிவாகமங்களின் நெறியில் அமைந்தன என்பதைப் பல்லவர் காலக் குறிப்பேடுகளாலும், சேக்கிழார் முதலியோருடைய நூல்களாலும் அறிகின்றோம். எனினும், கிடைத்துள்ள பல்லாயிரம் கல்வெட்டுக் களில் ஒன்றிலேனும் இன்ன கோயில் இன்ன சிவாகமப் படி அமைந்தது என்ற குறிப்பே காணப் படவில்லை. அவ்வக் கோயில்களிற் பணிபுரியும் சிவவேதியர், காரணம், காமிகம், வாதுளம் எனச் சிவாகமங்களைக் கூறுகின்றனரேயன்றி அவற்றைக் காட்டென்றால் காட்டுவார் இல்லை.

இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன் தோன்றிய அறிஞர் சிலர் வகுத்தளித்த செயல்முறை களை (பத்ததிகளை) ஆகம முறையாகக் கொண்டு 4.