பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/314

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் , 313

சிவவேதியர் தம் கோயிற் பணிகளை (கிரியைகளை)ச் செய்து வருகின்றனர். உண்மையை ஆராய்ந்தபோது, கழிந்த நூற்றாண்டுகளில் வைதிக வேதாந்திகள் “சிவாகமங்கள் பிரமாணமாகா” எனவும் ‘ஆகம வழியொழுகுவோர் மூடர்” எனவும் பழித்தும் இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வந்தமையாலும், அவர். கூட்டம் தொகை மிகுதியும் செல்வாக்கும் பெற்றிருந்தமையாலும் சிவவேதியர் தம்முடைய சிவாகமங்களைக் கைசோரவிட்டனர் என்பது தெரிந்தது. இந்நாளில் கிடைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் கூறுவன வொழிய யோகபாதம் கூறுவன அறவே இல்லை எனலாம். கிரியா பாதம் கூறுவனவற்றுள் பல அவரவரால் காலப்போக்கில் பொருந்தாதனவும் வேண்டாதனவும் எழுதிச் சேர்க்கப்பட்டுப் போலிகளாய் ஒழிந்தன.

இனி, இக்கோயில்களில் பல்லவர், சோழர்,

பாண்டியர், விசய நகரவேந்தர், நாயக்கமன்னர் காலங்களில் நாட்பூசனைக்கும் திருப்பணிக்கும் எனப் பல நிவந்தங்கள் (Endowments) அமைந் துள்ளன. கருவறை சீர் செய்தல், மண்டபங்கள் அமைத்தல், கோபுரத்திருப்பணி, புறமதில் திருப்பணி, திருவாபரண முதலியன செய்தளித்தல் முதலிய திருப்பணிகள் மிகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. கோப் பெருஞ்சிங்கன் முதலிய காடவ குலத்தவர் செய்துவைத்துள்ள திருவாபரணக் கல்வெட்டுக்கள் அழகிய பாட்டுருவில் படிப்பவர் மனம் மகிழத்தக்க