பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/315

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3f4 ஒளவை சு. துரைசாமி

வகையில் உள்ளன. சங்கு எடுத்துக் கொள்ளப்படுவது திருவானைக்காவில் சோழ வேந்தர் செய்த திருப்பணியாகும்.

சங்க காலச் சோழ வேந்தருள் ஒருவன் சோழன் செங்கணான். இடைக் காலச் சோழர் காலச் செப்பேடுகள், பெருநற்கிள்ளி, கரிகாலன் முதலிய வேந்தர் வழியினன் இச் செங்கணான் என்று கூறுகின்றன. கழுமலப் போரில் சேரமானை வென்று அகப்படுத்திச் சான்றோரான பொய்கையார் பாடிய களவழி என்ற நூலை வியந்து சேரனை விடுவித்தான் என்று கலிங்கத்துப் பரணியால் அறிகின்றோம். இவ்வேந்தர் பெருமானுக்கு நல்லடி என்றொரு மகனுண்டெனச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

திருவானைக்காவில் நாவல் மரத்தின் அடியில் விளங்கிய சிவபெருமானுக்கு முதன் முதலில் திருக்கோயிலெடுத்தவன் சோழன் கோச் செங் கணான் என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இவ் வேந்தனை நம்பியாரூரர், ‘தென்னவனாய் உல காண்ட செங்கணார்’ என்று சிறப்பிக்க, இவ் வர லாற்றைச் சிறிது விரித்த நம்பியாண்டார் நம்பிகள்,

“மைவைத்த கண்டன் நெறியன்றி

மற்றோர் நெறிகருதாத்

தெய்வக் குடிச் சோழன் முன்பு

சிலந்தியாய்ப் பந்தர் செய்து

சைவத் துருவெய்தி வந்து தரணி

நீடாலயங்கள்