பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/316

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 315

செய்வித்தவன் திருக்கோச்செங்க

ணான் என்னும் செம்பியனே” என்று பாடிப் பரவியுள்ளனர்.

சுந்தரமூர்த்திகள், இச்செங்கணான், பிறப்பாற் சோழனானதொருபுறம் நிற்க, “தமிழ்கூறும் நல்லுல கத்தை'த் தென்னவனாகவும், சேரலனாகவும் ஆண்டமை புலப்பட, “தென்னவனாய் உலகாண்ட” என்று கூறுகின்றார். இதற்கொப்ப, இவன் கட்டிய சிவன் கோயில்கள், பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்துள்ளன. சேரநாட்டில் இவன் திருப்பெயரமைந்த தொன்மைச் சிறப்புடையவூர்கள் இருப்பதே தக்க சான்றுபகர்கிறது. “தரணியில் நீடு ஆலயங்கள் பல செய்வித்தவன்” என நம்பி யாண்டார் உரைப்பதும், திருமங்கை மன்னனார் தமது பெரிய திருமொழியில், “இருக்கிலங்கு திரு மொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது” செய்தான் என்று விளம்புவதும் உண்மை யொளி பரப்புகின்றன. -

செங்கணான் திருவானைக்காவில் சிவன் இருந்த வெண்ணாவல் மரத்தில் சிலந்தியாய் இருந்து மறுபிறப்பில் சோழனாய்த் தோன்றினான் என்றொரு வரலாறு உண்டு. இதனைத் திருநாவுக்கரசர்,

“சிலந்தியும் ஆனைக்காவில்

திருநிழற்பந்தர் செய்து உலந்து அவன் இறந்தபோது

கோச்செங் கணானுமாகக்