பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 & ஒளவை சு. துரைசாமி

கலந்த நீர்க்காவிரி சூழ்

சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார்

குறுக்கை வீரட்டனாரே’ என்று தெரிவிக்கின்றார். இச்செய்தி, திருவானைக் காக் கோயிற் கல்வெட்டொன்றில் ஒரு தோப்புக்குப் பெயராய் “உள்ளுர் புதுப்புடை விளாகத்துச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத் தோப்பு’ (கல்.தொ. 4, 426) என்று போற்றிய மக்களின் சமய வுணர்வின் சால்பை விளக்கி நிற்கிறது.

செங்கணான் திருவானைக்காவில் தொடங்கிய கோயில் திருப்பணி செங்கல்லாலும் மரத்தாலும் ஆகியிருத்தல் வேண்டும். அதன் அமைப்பு தென் னார்க்காடு மாவட்டத்துத் திருமுட்டம் சிவன் கோயில் போன்றிருக்கலாம் என் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இப்போதுள்ள கற்றளியில் காணப் படும் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது முதற் பராந்தகனுடைய 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டு எனத் தெரிகிறது. இதற்கு முன்னைவாய்ப் படி எடுக்கப் பட்டவை என எவையும் காணப்படாமையால் இப்போதுள்ள கோயில் கி.பி. 907க்கு முன்னே கட்டிய தென்று தெரிய நிற்கிறது.

இடைக் காலச் சோழ வேந்தருள் ஆதித்தன் மகனாகிய முதற் பராந்தகனது. 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று இக்கோயிலில் உளது; எனினும் அது குறையாகவும் சிதைந்தும் உளது; அதன்கண்