பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 323

அரசினை ஏற்று நடத்தினான். இவனைச் “சமஸ்த ஜகதேக வீரன்’ என்றும் “இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகா ராசாதிராச நரபதி” என்றும் மெய்க் கீர்த்திகள் புகழ்கின்றன. இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் திருவானைக்காத் திருக்கோயிலுக்கு அரையன் நித்திய கல்லியாணனான துறையூர் பாண்டியராயன் நிலம் தருகிறான் (29/1937-38)

ஆறாம் ஆண்டில் திருவானைக்காவுடைய அண்ணல் கோயிற்கெனத் திருநந்தவனம் அமைக்கப் படுகிறது. (484/1908) அதே ஆண்டில் சிங்கண்ண தண்ட நாயகர் திருவானைக்காத் திருக்கோயிலில் சித்த வீச்சரத்தைக் கட்டி அதன் பூசைத் திருப்பணிக் கெனப் பாச்சில் கூற்றத்துத் திருவெள்ளறையில் சில நிலங்களைக் கொடுக்கின்றார். (73/1937-38)

இங்ஙனம் சங்க காலச் சோழனான செங்க ணான் முதல் இடைக்காலச் சோழர் பலரும் திரு வானைக்காவுடைய பெருமானுக்கு அரிய திருப்பணி புரிந்த திறத்தை ஒருவாறு கண்டோம். இப்பெரு மக்கலின் திருப்பணி நலங்களை அறிந்து கோடற் கேற்பப் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையும் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனரே யொழியப் பொது மக்கள் இனிதின் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடச் சுணங்குகின்றனர். இந்தியப் பேரரசு இவ்வகையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின் நம்