பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/325

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


324 இ ஒளவை சு. துரைசாமி

தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறும் சிறப்பும் நாடறிய விளங்கியிருக்கும். கோயில் வரலாற்றிலும் தமிழினத்தின் சமுதாய வளர்ச்சி வரலாற்றிலும் தெளிந்த அறிவுடைய நன்மக்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியற் பேரவைக்கு அனுப்பாத பெருங் குறையே, இன்று நாம் நமது வீழ்ச்சிக்குரிய காரணத்தை நினைந்து பார்க்க இயலாமைக்குரிய தடைகளுள் ஒன்றாகும். கல்வெட்டுத் துறையினர். தமது பணியைத் தொடங்கிச் சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன; நாம் அரசியல் உரிமை பெற்றுச் சுமார் 25. ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நாம் நமது பழமையும் புதுமையும் கலந்த வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து செம்மை செய்து கொள்ளும் திறமின்றி

யிருப்பது, நினைக்கும் போது மனத்துக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறதா? எண்ணுமின். .