பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15

குமரகுருபரர் நல்கும் சமயவாழ்வு’

தமிழ்ப் பெருமக்களே!

நாட்டின் நலத்தை நினைப்பதிலே நம் எண்ணம் ஊன்றி நிற்கிறது. ஏன்? நாட்டின் பெருமை நமக்கும் பெருமையைத் தருகிறது. ஆதலின், பொது வாகத் தமிழ்நாடு என்பதை விட்டுச் சிறப்பாக இங்குத் தென்பாண்டி நாட்டைச் சற்று உற்று நோக்குவோம்.

தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் பாண்டி நாட்டின் பழம் பெருமையைத் திறம்படப் பாராட்டினார். “நார்மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும், பார்மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு” என்பது அவர் தம் திருவாக்கு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டிய நாடு’ என்று போற்றினார். இன்றைய விஞ்ஞான

12-8-50 நெல்லையில் ஆற்றிய விரிவுரை. வித்துவான் அ.நவநீத கிருட்டின பிள்ளையவர்கள் கேட்டெழுதியது.