பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 இ. ஒளவை சு. துரைசாமி

ஆராய்ச்சி வல்லுநர், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர் எல்லோரும் ஒருங்கே முதன்முதல் தோன்றிய நிலம் தென் பாண்டி நாடேயெனத் தெளிவுறப் பேசுகின்றனர்.

இத்தகைய தொன்மைத் தென்பாண்டி | நாட்டின்கண் மிகப் பழமை வாய்ந்ததாய்த் திகழும் தெய்வமலை பொதியிலாகும். சிவன் வீற்றிருக்கும் கயிலையும், செந்தமிழ் முனிவன் தங்கும் பொதி யிலும் ஒத்த பெருமை யுடையன. கலையின் வடிவான பெருமுனிவன் அகத்தியன் நிலைபெற்று வாழும் நீடிய பெருமையுடையது இத் தென்பாண்டி நன்னாடு. இங்கே தமிழ்ச் சுவையளிக்கும் தண் பொருநையாறு பொய்யாத நீர் வளத்தைத் தந்துகொண்டிருக்கிறது. ஆற்று வளம் நாட்டிற்கு ஏற்றத்தை நல்கும். சோழநாட்டைக் காவிரி நாடென்றே போற்றுவர். தென்பாண்டி நாட்டைத் தண்பொருநை நன்னொடு என்னலாம்.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டை யாண்ட இராசேந்திரன் கங்கையாறு வரையிற் படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் தனது புலிக்கொடியை நாட்டினான். கங்கைகொண்ட புவிகாவலன் என்று போற்றும் பெருமையுற்றான்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலே தென்பாண்டி நாட்டில் தண்பொருநைக் கரையில் தோன்றிய குமரகுருபரர் கங்கை வரையிலும் தம்மை எதிர்த்த கவிஞரையெல்லாம் சொல்லாற்றலால் வென்று, காசிமன்னனையும் தன்னடிப்படுத்தினார்.