பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/328

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தமிழ்ச் செல்வம் இ 327

“மண்கண்ட வெண்குடைக் கீழாக மேம்பட்ட மன்னரும்

என்

பண்கண்டளவில் பணியச் செய்வாய்”

என்று கங்கைக்கரையில் நின்று முழங்கினார்.

கங்கைகொண்ட புவி காவலனாகிய சோழ வேந்தன் இமயத்தில் பொறித்த புலிக்குறி இன்று உண்டோ? இன்றோ? அறியோம். ஆனால், கங்கை கொண்ட கவி காவலராய குமரகுருபரர் காசியில் அமைத்த குமாரசாமிமடம் இன்றும் நின்று தமிழின் பெருமை பேசுகிறது; சைவத்தின் தெய்வ மாண்பைத் தெரிக்கிறது; குமரகுருபரரின் பேராற்றலைக் கூறுகிறது.

ஒரு நாட்டுக்குப் பெருமை அந்நாட்டில் தோன்றிய சான்றோரால் ஆகும். திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் குறிப்பிடப் புகுந்த சேக்கிழார் பெருமான்,

“மறந்தருதி நெறிமாற மணிகண்டர் வாய்மைநெறி அறந்தருநா வுக்கரசு மாலால சுந்தரரும் பிறந்தருள உளதானா னம்மளவோ பேருலகில் சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு” என்று வியந்து போற்றினார். நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்தருளும் பெருமையுற்றது திருமுனைப் பாடி நாடு’, என்று பாராட்டினார்.

நம் தென்பாண்டி நன்னாடோ குமரகுருபரரும், சிவஞான முனிவரரும் திருவவதாரம் செய்த